வீட்டில் கூழ் ஊற்றிய பின் கும்பம் கலைப்பது ஏன் தெரியுமா..?
ஆடி மாதம் பிறந்ததுமே பலரும் கூழ் ஊற்றுவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள் அதிலும் பலரும் வீட்டில் கும்பம் கலைப்பது வழக்கம்.., ஒரு சிலர் கும்பம் சாப்பாடு மட்டுமே போடுவார்கள். வீட்டில் கும்பம் கலைப்பது ஏன்..? அப்படி செய்தால் என்ன பலன் கிடைக்கும் என தெரிந்துக்கொள்ளலாம்.
ஆடி மாதம் பெரும்பாலும் அம்மன் சுவாமிகளுக்கு மிகவும் விஷேசம்.., அதிலும் பெரியபாளையத்து அம்மன் மற்றும் முத்து மாரியம்மனுக்கு மிகவும் விஷேசம். ஞாயிற்று கிழமை அன்று கூழ் ஊற்றும் பொழுது பெரியபாளையத்து அம்மன் வயதானவர்கள் வடிவில் வந்து நம்மிடம் கூழ் வாங்கி குடிப்பாராம்.
எனவே வீட்டில் கூழ் ஊற்றும் பொழுது வயதானவர்கள் மூன்று பேருக்கு முதலில் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும். பெரியபாளையத்து அம்மன் காலையில் எப்படி நம் வீட்டில் வந்து கூழ் வாங்கி குடிக்கிறாரோ மாலையும் நம் வீட்டிற்கு வர ஆசை படுவார்.
எனவே மாலை நேரத்தில் அவரின் சகோதரிகளையும் அழைத்து கொண்டு வருவாரம்.., அவரின் சகோதரிகளான அங்காள அம்மன் மற்றும் முத்து மாரியம்மன் மாலை நீங்கள் கும்பம் சாப்பாட்டை தல வாழையில் போட்டு விருந்து வைத்தால் அதை மிகவும் விரும்பி சாப்பிடுவாராம்.
முக்கியமாக முத்து மாரியம்மன் மற்றும் அங்காள அம்மனுக்கு கும்பம் கலைப்பது மிகவும் பிடிக்கும்.., அவரை கும்பம் கலைத்து அந்த சாப்பாடை வாங்கி சாப்பிட்டால் நோய்கள் சரியாகி விடும். அது மட்டுமல்லாமல் வீட்டிற்கு அம்மனை அழைத்து கும்பம் கலைத்து சாப்பாடு போட்டு வயிறையும் மனதையும் நிறைவாக்கினால்.., எப்பொழுதும் உங்களுக்கு 3 பேரும் பக்க துணையாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.
எனவே தான் பலரும் கூழ் ஊற்றி முடித்து விட்டு மாலை நேரத்தில் வீட்டில் கும்பம் கலைக்கின்றனர்.., இதற்கு முன் தெரியாமல் எதாவது தவறு செய்து இருந்தால் இந்த முறை சரியாக செய்து அம்மனின் அருளை பெற்றுக் கொள்ளலாம்.
கும்பம் சாப்பாடு :
சாப்பாடு,
கருவாடு குழம்பு,
முருங்கை கீரை,
கொத்தவரை பொரியல்,
மீன் குழம்பு,
சிக்கன் தொக்கு,
மீன் வறுவல்,
முட்டை,
கொழுக்கட்டை,
என அனைத்தையும் ஒரே வாழை இலையில் போட்டு படைப்பது தான் கும்பம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆலயங்கள், பரிகாரங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..