கூழ் ஊற்றும் இந்த உணவை படையல் வைப்பது ஏன் தெரியுமா..?
ஆடி மாதம் கோவில்களிலும் இல்லங்களிலும் கூழ் ஊற்றுவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். அப்படி கூழ் ஊற்றும் பொழுது அம்மனுக்கு பிடித்த கூழ், கருவாடு குழம்பு, முருங்கை கீரை, கொத்தவரை பொரியல் என அனைத்து கொடுப்பார்கள்.
அதனுடன் வெல்லம் வைத்த உண்டை, பச்சரிசி மாவு உடன் வெல்லம் சேர்த்த மாவு தருவார்கள் இதனை தருவதற்கான காரணங்கள் ஏன் தெரியுமா.
ரேணுகா என்ற ஒரு பெண் மணி அந்த காலத்தில் நான்கு மகன்களுடன் வசித்து வந்துள்ளார், அப்பொழுது அவர் கணவர் சிறு வயதிலேயே இவரை விட்டு பிரிந்து அதவாது இறந்து விடுவார் அப்படி இறந்த பின் ரேணுகா கணவரை நினைவுடன் வாழ பிடிக்காமால் உடன் கட்டை எறியுள்ளார்.
ரேணுகா ஒரு சிவனின் மிக பெரிய பக்தராம் அதனால் ரேணுகா உடன் கட்டை ஏறும் பொழுது மழை வந்து அனைத்து விடும், ஆனால் அந்த தீயால் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு விடும், அப்பொழுது ரேணுகா இந்த காயங்களுடன் எப்படி ஊருக்கு செல்வது என எண்ணி அருகில் உள்ள ஒரு மழைபகுதிக்கு சென்று விடுவார்.
அப்பொழுது ரேணுகாவின் உடைகள் தீயில் பொசுங்கியதால்.., வேப்பிலையை உடல் முழுவதும் கட்டிகொண்டு அந்த பகுதிக்கு செல்வார்.., சில காலம் யாரிடமும் பேசாமல் வேப்பிலை கட்டி கொண்டே வாழ்ந்து வந்துள்ளார்.., வேப்பிலையின் சக்தியால் உடலில் இருந்த தீ காயங்களும் மறைந்து உள்ளது.
ஒரு நாள் வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டிருந்த ரேணுகாவிற்கு பசி அதிகமாக மழைவாழ் மக்களிடம் சென்று எனக்கு பசிக்கிறது ஏதாவது இருந்தா கொடுங்க என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மக்கள் நீங்கள் அம்மன் வடிவில் இருக்கிறீர்களே உங்களுக்கு எப்படி நாங்கள் சாப்பிடுவதை கொடுப்பது.., எதையும் எச்சில் செய்யாத கூழ், வெல்லம் உண்டை மற்றும் பச்சரிசி மாவு மற்றும் இளநீர், உள்ளது இதை சாப்பிடுங்கள் என கொடுத்துள்ளார்கள்.
அப்பொழுது தோன்றிய சிவபெருமான் ரேணுகாவிடம் இனி நீ முத்து மாரியாக அவகரிப்பாய், அதற்கான வரத்தை நான் உனக்கு தருகிறேன்.., நீ சாப்பிடுவது பக்தர்கள் உனக்கு நைவைத்தியமாக படைப்பார்கள் உன்னை நாடி வரும் பக்தர்களின் நோயை நீ விரட்டி அவர்களின் குறையை நீ தீர்ப்பாய், உனக்கு நேர்த்திக்கடனாக உன் பக்தர்கள் உனக்கு வேப்பஞ்சேலை அணிந்து வேண்டுதல் செய்வார்கள் என வரம் கொடுக்கிறார்.
எனவே தான், நாம் அம்மனுக்கு வேப்பஞ்சேலை கொடுக்கிறோம் அவருக்கு நைவைத்தியுமாக உண்டை, பச்சரிசி மாவு, இளநீர், வைக்கிறோம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..