‘கொரோனாவுக்கு மருந்து’ பாபா ராம்தேவின் விளம்பரத்திற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி பாபா ராம்தேவ் வெளியிட்ட விளம்பரத்திற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொடர்பாக யோகா குருவும், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனருமான பாபா ராம்தேவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது மருத்துவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அந்த வீடியோவில் தோன்றும் பாபா ராம்தேவ் பலவிதமான பொருட்களை தன் முன்னால் வைத்துக்கொண்டு கையில் ஒரு செடியுடன் நின்றுகொண்டு, நாங்கள் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டு அஷ்வகந்தாவை கண்டுபிடித்துள்ளோம் என்றும் இந்த அஷ்வகந்தா கொரோனா புரதத்தை மனித புரதத்துடன் கலக்க அனுமதிக்காது என்றும் அதில் பேசியுள்ளார்.

இதனை பார்த்த மருத்துவர்கள் பலரும் “பாபா ராம்தேவின் செயல் கண்டிக்கத்தக்கது.போலியான பாதுகாப்பை உருவாக்கும் இதுபோன்ற விளம்பரங்களை அரசு தடை செய்யவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

What do you think?

-1 points
Upvote Downvote

‘கொரோனா அறிகுறி’ மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட நபர்!

பைக் ரேஸில் அஜித்துடன் போட்டி போடும் ஹீமா குரேஷி!