விமானத்தில் பயணம் செய்ய இனி ஆவணம் தேவையில்லை..!
சென்னை, கோவை விமான நிலையங்களில், ஆவணங்களை காட்டி பயணம் செய்ய தேவையில்லை. இந்த ஒரு சிறப்பு அம்சம் இனி ஆவணம் இல்லாமல் நம்மை பயணிக்க செய்யும். “டிஜியாத்ரா” திட்டத்தின் கீழ், முக அடையாளத்தை காட்டி, பயணம் செய்யும் திட்டம் விரைவில் வர உள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டிச் செல்வதால், நேரம் அதிகம் செலவாவதால் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
விமான நிலையங்களில் அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது. அதை தவிர்க்க, மத்திய அரசு, “டிஜியாத்ரா” என்ற திட்டத்தை, 2022 அறிமுகம் செய்தது.
ஆனால் இந்த திட்டம் பலருக்கு தெரியாமல் போனது.., ஆனால் தற்போது அதை விரிவுபடுத்தி செயலியாக மாற்றி கொண்டுவந்துள்ளது.
இதை எப்படி உபயோகிப்பது என்று பார்க்கலாம்.
அதன்படி, பயணிகள் தங்களின் ஸ்மார்ட் போன்களில், “டிஜியாத்ரா” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம், பயணத்திற்கான டிக்கெட் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் பின் விமானத்தில் பயணம் செய்யும் நாளில், எந்த அரசு ஆவணமும் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாஸ்போர்ட்டை மட்டும் கொண்டு செல்ல வேண்டும்.
“டிஜியாத்ரா” செயலி மூலம் மேற்கு வங்கம் – கோல்கட்டா, மஹாராஷ்டிரா – மும்பை, குஜராத் -ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்த மாதம் முதல் தமிழகத்தில், சென்னை, தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் விமானநிலையங்களில் அமலுக்கு வர உள்ளது.
கேரள மாநிலம் – திருவனந்தபுரம், கர்நாடகா – மங்களூரு, ஆந்திரா – விசாகப்பட்டினம் உட்பட, 14 விமான நிலையங்களிலும் அமலுக்கு வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது :
தற்போது நாடு முழுதும், டிஜியாத்ரா செயலியில், 4.58 மில்லியன் பயணியர் இணைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில், முக அடையாளத்தை காட்டி பயணிக்கும் திட்டத்தை, மார்ச், 31ல் அமல்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அமைச்சகங்களின் ஒப்புதல் பெற வேண்டியதால், நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதனால், காலதாமதமாகி விட்டது. அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது. என இவ்வாறு அவர்கள் கூறினர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..