பசும்பால் பிறந்த குழந்தைக்கு ஊட்டம் தருமா? ஆபத்து விளைவிக்குமா?
குழந்தை பிறந்ததில் இருந்து அவர்களை வளர்க்கும் வரை பெற்றோர்கள் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள். அப்படி இருந்து சில சந்தேகங்கள் இருந்து தான் வருகிறது.
அதில் ஒன்று தான், பிறந்த குழந்தைக்கு பசும்பால் கொடுப்பது சரியா? கொடுத்தால் பின் விளைவு ஏற்படுமா என்று. இதற்கான விளக்கம் அளிக்கிறார். மருத்துவர் மு.ஜெயராஜ்.
பசும்பால் தூய்மையாக இருந்தாலும் கூட, பிறந்து ஒரு வயது ஆகாத குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் அலர்ஜியை ஏற்படுத்தும். அதை பசும்பால் புரத ஒவ்வாமை என சொல்லுவார்கள்.
இதனால். வாந்தி, வயிற்றுப்போக்கு, குடல் சரிவு, சரும பிரச்சனை, மார்பு சளி, மற்றும் கண்களை சுற்றி வீக்கம் போன்ற பின் விளைவுகள் ஏற்படும்.
பசும் பாலில் “பீட்டா” எனும் எனும் புரதம் இருப்பதால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பசும்பால் குடிப்பதால், ஒவ்வாமை ஏற்படும். அதுவே 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் பசும்பால் குடித்தால் ஒவ்வாமை குணமாகிவிடும். எனவே ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது அவர்களின் புரத சக்தியை அதிகரிக்கும்.