மன அழுத்தம் பல உறுப்புகளை பாதிக்கிறதா..! உங்களுக்கு தெரியுமா..?
டிஜிட்டல் மயமாக இயங்கி வரும் இந்த காலகட்டத்தில், நாம் ஒவ்வொரு வரும் சாப்பிட கூட நேரம் இல்லாமல், சாப்பிடுவதற்கு என்று நேரம் ஒதுக்காமல், ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதற்கு நடுவில் ஓய்வு, பொழுதுபோக்கு என்ற விஷயங்களை நாம் மறக்கிறோம். ஆனால் அதை மறப்பதால் நாம் பல்வேறு உடல் பிரச்சினைகளை வாங்கிக் கொள்கிறோம்.
நமக்கே தெரியாமல் நம் உடலில் பலவகையான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு கொடுக்கிறோம். இப்படி ஓடி உழைத்து நாம் சேர்க்கின்ற பணத்தை, பல மடங்கு மருத்துவமனைக்கு செலவழிக்கிறோம். இந்த மாதிரி வாழ்வியல் சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.
மன அழுத்தம் என்பது சராசரியான மனிதருக்குள் வரும் சாதாரண விஷயம் இல்லை. மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மன அழுத்தம் என்பது சிறு வயது முதலே நமக்கு தெரியாமல் நம்முள் தோன்றும் ஒரு பெரிய பாதிப்பு.
ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் ஒவ்வொரு வடிவில் வெளியாகும். ஒரு சிலருக்கு கோபமாகவோ, பதட்டமாகவோ, மௌனமாகவோ மன அழுத்தத்தை வெளிப்படுத்துவார். இப்படி மன அழுத்த நோய்க்கு ஆளாவதால் நம் உடலில் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. அவற்றை பார்க்கலாம் .
1. மன அழுத்தம் முதலில் சருமம் மற்றும் தலைமுடி பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறது. மன அழுத்தம் உள்ளவர்கள் முகத்தில் பொலிவு இல்லாமல், மிகவும் தோய்வான முகமே இருக்கும். அது மட்டும் இன்றி அரிப்பு தோல் தடிப்பு அலர்ஜி போன்ற சரும பிரச்சனைகள் வரும். தலைமுடியும் கொத்து கொத்தாக கொட்ட துவங்கும்.
2. மன அழுத்தம் உடலில் வலிகளை ஏற்படுத்தாது. அதற்கு மாறாக உறுப்புகளை சேதப்படுத்தும். மன அழுத்தத்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்.
3. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பதட்டமான தலைவலி, கழுத்து, தாடை, தோள்பட்டை வலிகள் போன்ற மோசமான விளைவுகளை தரும்.
4. மன அழுத்தம் அதிகரிக்கும் போது நமக்கே தெரியாமல் நெஞ்செரிச்சல் உணரக்கூடும். அல்லது வயிற்று வலியும் வர வாய்ப்புகள் உண்டு. மன அழுத்தம் செரிமான மண்டலத்தை தாக்குவதால், இந்த வலிகள் ஏற்படும்.
இது மன அழுத்தத்தினால் ஏற்படும் வலி என்பதை நாம் உணர்வதில்லை. உடனே மருத்துவரை அனுகி, அதற்கான சிகிச்சை மட்டும் மேற்கொண்டு வருவோம். ஆனால் அந்த வலி சரியாகும் மன அழுத்தம் என்பது நமக்குள் அப்படியே தங்கிவிடும்.
5. மன அழுத்தம் தசைப்பிடிப்புகளை உண்டாக்கும் மூட்டு வலி, பக்கவாதம் போன்ற பெரிய பிரச்சனைகளுக்கும் வழிகளை ஏற்படுத்தும்.
6. இறுதியாக மன அழுத்தம் பெரிய அளவில் இதயத்தை பாதிக்க நேரிடும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். இது ரத்த நாளங்கலை இருக்கம் அடைய செய்து, ஆக்சிஜனை மாற்றி விடுகிறது. இதனால் நம் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடியும்.
மன அழுத்தம் என்பது சாதாரண நோயல்ல. இந்த மன அழுத்தத்தை போக்குவதற்கு நாம் பெரிதும் நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஒவ்வொரு வரும் நம் உடலை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் அல்லது மாலையில் உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
தினசரி செய்ய முடியாவிட்டாலும், வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்களாவது செய்யலாம். அது மட்டும் இன்றி வேலை சுமைகள் அதிகமாக இருந்தாலும், நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஒரு சில நேரத்தையோ ஒரு நாளையோ ஒதுக்கி, அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
பிடித்த விஷயங்களை நாம் முழு மனதுடன் சந்தோஷமாக செய்யும்போது அந்த அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை உண்பது, வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பயிற்சிகள் மேற்கொள்வது ,போன்ற சின்ன சின்ன விஷயங்களை செய்து நம்மை நாம் மன அழுத்தத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..