கர்ப்பகால தடுப்பூசி குழந்தையை பாதிக்குமா..?
கருவுற்ற பின் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களில் இதுவும் ஒன்று, கர்ப்பகாலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தையை பாதிக்குமா ? என்று அந்த கேள்விக்கான பதில் இதோ..
கர்ப்பக் காலத்தின் 27 முதல் 36 வாரங்களுக்குள் டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா டாக்ஸைடு என்ற தடுப்பூசியை போட்டு இருக்க வேண்டும்.
இந்த தடுப்பூசிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோய் எதிர்ப்பு தொற்றில் இருந்து பாதுகாக்கவும், கருவில் உள்ள குழந்தையை பாதுகாக்கவும் உதவுகிறது.
பிரசவத்திற்கு பின் குழந்தைக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகளில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது.
எனவே கர்ப்பகாலத்தில் இந்த தடுப்பூசிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றி உங்களுக்கு பயமோ அல்லது சந்தேகமோ இருந்தால்.., உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதுபற்றி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.