உங்க குழந்தைக்கும் இந்த பழக்கம் இருக்கா…? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!
உங்கள் குழந்தைகள் அதிகமாக சாக்லேட் சாப்பிடுகிறார்களா அதை எப்படி தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…
எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றால் அதன் சாக்லேட் மற்றும் மிட்டாய்கள்தான் அம்மா மார்கள் என்ன சொல்லியும் குழந்தைகள் இனிப்பு சாப்பிடுவதை தடுக்க முடியாது அதனால் தான் உங்கள் குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவதை தடுக்க சில டிப்ஸ இந்த பதிவில் இருக்கு
உங்கள் குழந்தைக்கு நீங்கள் முதலில் ரோல் மாடலாக இருங்கள். நீங்கள் அதிகமாக இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்துங்கள் அதிக இனிப்பு உணவுகளை சாப்பிடும் போது எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என எடுத்துரையுங்கள்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற உணவுகளை சாப்பிட கொடுங்கள் சோடா பழச்சாறு மற்றும் கார்பனேட் பானங்களை தவிருங்கள்.
குறைந்த சர்க்கரை பானங்களை மட்டும் குடிக்க கொடுங்கள்., உணவுப் பொருட்களை வாங்கும் போது பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிங்கள்.
முக்கியமா சர்க்கரை சேர்க்கப்படாத தயிர் பீனட் பட்டர் போன்றவற்றை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். அதுமட்டுமில்லாமல் தேன் அல்லது மேப்பில் சிரப் போன்ற இயற்கையான இனிப்புகளை சேர்க்கலாம்.
உங்கள் குழந்தைக்கு இனிப்பிற்கு பதிலாக பழங்களை சாப்பிட கொடுக்கலாம் குறைந்த சர்க்கரை கொண்ட தானியங்கள் ஓட்ஸ் மீல், முட்டை போன்றவற்றை சாப்பிட கொடுக்கலாம் இவை ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும்.
குழந்தைகளை சமையலில் ஈடுபடுத்தும் போது எந்த உணவுகள் ஆரோக்கியமானது என தெரிந்து கொள்வார்கள் எனவே குழந்தைகளுக்கும் சின்ன சின்ன சமையல் என்று சொல்லிக் கொடுங்கள்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..