‘வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் முகம்’ அதிர்ச்சியடைந்த வாக்காளர்!

மேற்கு வங்காளத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்தின் போது நாய் புகைப்படம் இடம்பெற்றதால் வாக்காளர் அதிர்ச்சியடைந்தார்.

மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர் (64). இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவரது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதனை பார்த்த கர்மாகர் பேரதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த வாக்காளர் அட்டையில் கர்மாகர் புகைபடத்துக்கு பதிலாக நாயின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து கர்மாகர், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார். உடனடியாக அந்த நாயின் புகைப்படம் நீக்கப்பட்டு கர்மாகர் புகைப்படம் இடம்பெற்ற மாற்று வாக்காளர் அட்டை அவருக்கு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்யும்போது நேரிட்ட தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

What do you think?

ஜிப்ஸி சென்சார் கட் 2 – ‘ஒரே நாடு, ஒரே மொழி’

‘குழந்தைகள் ஆபாச பட விவாகரம்’ வேலூரில் இளைஞர் ஒருவர் கைது!