இந்தியாவில் கூடுதலாக வரி விதிக்கிறார்கள்; டிராம்ப் குற்றச்சாட்டு

இந்திய வருகை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். .

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கிடையே அதிபர் தேர்தலையொட்டி கொலராடோ மாகாணத்தில் நடந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அக்கூட்டத்தில் தனது இந்திய பயணம் குறித்து அவர் சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

அதில், ”அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் வர்த்தகம் பற்றி பேசப்போகிறோம் என்று கூறினார். அவர்கள் வர்த்தகத்தில் நம்மீது பல்லாண்டு காலமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள், நமது பொருட்களுக்கு மிகவும் கூடுதலாக வரி விதிப்பதாகவும், உலகிலேயே கூடுதலாக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக” டிராம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

What do you think?

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கியது

சீனாவில் சிறைகளையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்!