இணையத்தை கலக்கும் ‘டிராம்பாகுபாலி’ – மிரட்டல் வீடியோ

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப்பை ‘பாகுபலி’ போன்று சித்தரித்து வெளிவந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் இரண்டுநாள் சுற்றுப்பயணமாக நாளை (பிப்-24) இந்தியா வரவிருக்கிறார். இந்திய பயணத்தை அதிகம் எதிர்ப்பார்ப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள டிராம்ப், இந்தியாவில் விதிக்கப்படும் கூடுதல் வரி குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். உலகளவிலும் டிராம்ப்பின் இந்திய பயணம் குறித்து அதிக எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகிறது.

டுவிட்டரில் வைரலாகும் இந்த வீடியோவை ரீடிவிட் செய்துள்ள டிராம். இந்திய நண்பர்களை சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ‘டிராம்பாகுபாலி’-இன் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையடுத்து, மீண்டும் பாகுபலி படம் குறித்த விவாதங்கள் இணையவாசிகளிடம் அதிகரித்துள்ளது.

What do you think?

கிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! – வைகோ கோரிக்கை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!