52 Total Views , 1 Views Today
பாஜகவை எதிர்க்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து சில கருத்துகளைத் கூறியுள்ளார். 2024 மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் திரள வேண்டும் என்று கூறபடும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மியை பலப்படுத்தும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக பஞ்சாபைத் தொடர்ந்து குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் 2024 இல் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில் தனித்துப் போட்டியிடும் திட்டத்தில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு, அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பது மட்டும் இந்தியாவை நம்பர் ஒன் நாடாக மாற்றிவிடாது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களையும் நாம் ஒன்றுதிரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நான் எந்த கட்சிக்கும் எதிரானவன் இல்லை. இந்த அரசியலில் கூட்டணி வைப்பதும் அதை முறித்துக் கொள்வதும் எனக்குப் புரியவில்லை என கூறினார். உங்களுக்குப் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும் என்றால் என்னைக் கூப்பிடங்கள் நான் வந்து சரி செய்து தருகிரேன். ஆனால் எனக்குக் கூட்டணிகள் எப்படிச் செயல்படும், சீட் பகிர்வு குறித்து எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தனித்துக் களமிறங்குவது பாஜகவுக்கு பலத்தைத் தரும் என்பதால், ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் எனறு மூத்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.