‘கொஞ்சநேரம் கூட நிம்மதியா இருக்க விட மாற்றங்கப்பா..’ குழந்தையின் உலகம்
பொதுவாகவே பிறந்த குழந்தைகளை புரிந்து கொள்வது கடினம். அவர்கள் ஏன் திடீரென அழுகிறார்கள், சிரிக்கிறார்கள். அதற்கு காரணம் பசியா? என குழப்பமும் இருக்கும். குழந்தைகள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சிலவற்றை பார்ப்போம்.
பிறந்த குழந்தைகள் தாயின் கருவறையில் இருட்டில் இருந்தே பழகியிருப்பார்கள். அவர்களுக்கு, புதிதாக ஒரு வெளிச்சம் கண்டால் அழுக தான் செய்வார்கள்.
அதிலும் சில குழந்தைகள் வெளிச்சம், சத்தம், அதிக நபர்கள் சூழ்ந்து இருப்பது, போன்றவற்றை விரும்புவதில்லை.
வெளிச்சதை சில குழந்தைகள் விரும்புவார்கள். வெளிச்சம் இல்லாத இடத்தில் கொண்டு சென்றால் உடனே அழுது விடுவார்கள். சில குழந்தைகள் அதற்கு நேராக இருப்பார்கள் சிறு வெளிச்சம் கண்களில் பட்டால் கூட முகத்தை சுளித்து கொள்வார்கள்.
சில குழந்தைகள் தாய் தந்தை அரவணைப்பை மட்டும் விரும்புவார்கள்.
குழந்தையை பார்த்ததும் எல்லோருக்கும் தூக்கி, கொஞ்சி விளையாட ஆசையாக தான் இருக்கும். ஒரு சில குழந்தைகள் அதை விரும்பி அமைதியாக இருப்பது, சிரிப்பது. போன்ற குறும்பு செயல்களை செய்வார்கள்.
சில குழந்தைகள் அதை விரும்புவதில்லை பார்த்த முகத்தை தவிர வேறு யாரவது தூக்கினால் உடனே அழ தொடங்கிவிடுவார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
குழந்தைகளை அவர் போக்கில் விடுங்கள். குழந்தை அழுதால், உடனே அம்மாக்கள் அவர்களை தனியே தூக்கி சென்று சமாதானம் செய்து பழகுங்கள். இவ்வாறு செய்தால் குழந்தையின் உடலும் மனமும் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.