“பேராசை கொள்ளாதே..” குட்டிஸ்டோரி-61
ஒரு ஊரில் உள்ள மரத்தடியில் கழுகு ஒன்று கூடு கட்டி வாழ்ந்து வந்ததாம்.., அந்த கழுகுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கனால தினமும் தியானம் பண்ணுமா..
அப்படி ஒருநாள் தியானம் பண்ணிட்டு இருந்த அப்போ., கடவுள் அந்த கழுகு முன்னாடி தோன்றி இருக்காரு, அப்போ அந்த கழுகு கடவுள் கிட்ட நான் உங்களை பார்த்ததில் சந்தோஷமா இருக்கேன்., கடவுளே அப்படி சொல்லி ஒரு வரம் கேட்குது.
கடவுளும் நீ கேட்கும் வரத்தை நான் உனக்கு கொடுக்கிறேன் என சொல்கிறார். அது கேட்டது என்னவென்றால். எனக்கு போதும் போதும் என சொல்லும் அளவிற்கு சாப்பாடு வேண்டும் என கேட்க, கடவுளும் சரி நீ கேட்ட படியே ஆகட்டும் என சொல்கிறார்..
ஒரு நாள் முழுக்க கடந்து போக அந்த கழுகிற்கு உணவு கிடைக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த கழுகு மீண்டும் கடவுளிடம் சென்று கேட்கிறது..
அப்போது மீண்டும் தோன்றிய கடவுள் உனக்கு பின்னாடி பாரு அப்படின்னு சொல்லுறாரு.. கழுகிற்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன கடவுளே நீங்க என கேட்க., உனக்கு பின்னாடி பாரு தோட்டம் இருக்கு, நீ இருக்கும் மரத்திலேயே எத்தனையோ பழங்கள் இருக்கு நீ கேட்டதை விட அதிகமாக உணவை நான் கொடுத்துவிட்டேன் என சொல்லி மறைந்து விடுகிறார்.
இதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று தான்.., நமக்கு தேவையான விஷயங்கள் நம் கண் முன் இருந்தும் நம் மனம் அதை பார்க்காமல் மற்றவைக்கு ஆசைப்பட்டால் அந்த கழுகை போல நாள் முழுக்க பட்டினியாக தான் இருக்க வேண்டும்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..