இதை தெரிந்துக்கொள்ளாமல் இனி ஸ்வீட் வாங்காதீங்க..!!
இனிப்புகளில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி பண்டிகை காலம் வந்தாலே வீடு முழுக்க இனிப்புகள் நிறைய இருக்கும். அந்த வகையில் பால், பால் சார்ந்த பொருட்களை கலப்படத்தை எப்படி கண்டு பிடிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..
பாலில் கலப்பட இருந்தா எப்படி கண்டுபிடிப்பது..?
ஒரு தட்டை எடுத்து லைட்டா சாச்சு அதுல ஒரு சொட்டு பால் விடும்போது முதல்ல நேரடியா நின்னு அதுக்கப்புறம் வழியும் அந்த இடம் காய்ந்ததும் ஒரு வெள்ளை அடையாளம் தெரியும் அப்படி இருந்தா தண்ணீர் கலக்காத பால்.
அதுவே தண்ணீர் கலந்தா அது சீக்கிரம் வழிஞ்சிரும், எந்தவித தடையும் இருக்காது
பால்கோவா ஒரு ஸ்பூன் எடுத்து அதுல ஒரு கப் சூடான தண்ணீர ஊற்றி நல்லா மிக்ஸ் பண்ணனும் அப்புறம் அதற்கு சிறிதளவு அயோடின் சேர்க்கணும். பால்கோவா நீல நிறமா மாறினா அது ஸ்டார்ட் செய்து கலப்படம் செய்யப்பட்டிருக்கும் என்று அர்த்தம்.
அதுவே பால்கோவாவில் பார்மலின் என்னும் ரசாயன கலவை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள சிறிதளவு கந்தக அமிலத்தை சேர்த்தோம்னா கண்டுபிடிக்கலாம்
பால்கோவா புதிதானு கண்டுபிடிக்க அதை வாங்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில வச்சு தைக்கணும் அப்படி தேய்க்கும் போது அது எண்ணெய் பசையுடன் மணல் மணலா சற்று இனிப்பு கூடுதலாக இருந்தால் அது புது பால்கோவா
பல்வேறு இனிப்புகளை நம் நெய் தான் பிரதானமாக பயன்படுத்துவோம். ஒரு கண்ணாடி ஜாரில் கொஞ்சம் நெய் இல்லனா வெண்ண எடுத்துக்கணும் அதுல மூணு சொட்டு அயோடின் சேர்த்தால் அதுல நீலநிறமா மாறினா அதில் பிசைந்த உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து கலப்படம் இருக்குதாம்.
அதே மாதிரி தேன் கொஞ்சமா எடுத்துக்கோங்க அதுல தண்ணீரை ஊற்றினால் சுத்தமான தேன் இருந்தா அது கரையும். அதேபோல ஒரு பஞ்சு எடுத்து தேனை நனைத்து அதனை தீயில காட்டணும் சுத்தமான தேனா இருந்துச்சுன்னா முழுவதுமே எரிஞ்சிரும் இல்லனா எரியாது.
ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து அதுல தண்ணில நிரப்பி கொள்ளுங்கள். பின்னர் 10 கிராம் சர்க்கரை அல்லது வெள்ளம் போடணும் அதுல சாக் பவுடர் கலப்படம் இருந்தால் தண்ணீரில் அடியில் தங்கி விடும் என்று சொல்லபடுது.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை மற்றவர்களுக்கும் பகீர்ந்திடுங்கள்..
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..