” தோஷங்கள் நீக்கும் வில்வ இலை” சிவன் வழிபாட்டில் இதை செய்ய மறக்காதீங்க..!!
வில்வ இலைகளை எப்போது பறிக்க வேண்டும்? வில்வ இலைகளில் பூஜித்து வருவதால் கிடைக்கக்கூடிய உன்னதமான பெரும் பயன்கள் என்ன என்பதை பார்க்லாம் வாங்க;
ஆன்மீகத்தில் மிகவும் முக்கியத்துவமும், மகத்துவமும் உடையது வில்வ மரம்..
அதற்க்கு காரணம், வில்வ இலைகள் சிவன் என்றும், முட்கள் சக்தி என்றும், அதன் கிளைகள் வேதங்கள் என்றும் போற்றப்படுகின்றன.
அதனால்தான் சிவ பூஜைகளில் வில்வ இலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
வில்வ இலைகள் பற்றி ஒரு சிறு தொகுப்பு :
வில்வங்களில் 21 வகைகள் இருப்பதாக சொல்லபடுது.
.ஆனாலும் மகா வில்வமும், அகண்ட வில்வமும்தான் மிக உயர்ந்த வகைகளாக கருதப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து இந்த வில்வ மரம் தோன்றியதா சொல்லபடுகிறது.
அதனால்தான், யாகங்களில் வில்வ காய்களை பயன்படுத்துவார்கள்.
இதில் 3 இலை வடிவமானது சிவபெருமானின் மூன்று கண்களை அல்லது திரிசூலத்தை குறிப்பதாகும். அதாவது, முக்கூறுகளைக் கொண்ட 3 இலைகள், திரிசூலத்தின் குறியீடாக பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.
தோஷங்கள் :
வில்வ இலைகளை வைத்து பூஜிப்பதால் தோஷங்கள் சரி ஆகுமா அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்கலாம் வாங்க;
வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் குடும்பத்திலிருந்து அகலும், பீடித்திருக்கும் தோஷங்களும் விலகும், வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், பூஜைக்குப் பயன்படுத்துகிறபோது, சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லிகிறார்க்கள்.
அதாவது, சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே இந்த இலையை பறித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
குறிப்பாக சதுர்த்தி அஷ்டமி, நவமி சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய திதிகளில் வில்வம் பறிக்கக்கூடாது.
வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம்.
3, 5, 7 இதழ்கள் கொண்ட வில்வங்கள் சிறப்புக்குரியது.
ஆனால் எக்காரணம் கொண்டும், சிவபெருமானுக்கு இரட்டை படை எண்ணிக்கையிலான வில்வ இலைகளை அர்பணிக்க கூடாது.
அர்ச்சனை :
காய்ந்த நிலையில் இருந்தாலும் வில்வ இலைகளை எப்படி அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம் வாங்க பார்க்கலாம் வாங்க;
ஒரு முறை அர்ச்சனைக்கு பயன்படுத்திய வில்லத்தை, மறுநாள் தண்ணீரில் சுத்தம் செய்து, மறுபடியும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். இப்படி 5 நாட்கள் வரை பூஜைக்கு பயன்படுத்தலாம். வில்வத்தை பறித்து ஆறு மாதம் வரை வைத்திருந்தும் பூஜை செய்யலாம் என்று சொல்லபடுது.
அதேபோல் மகா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு வில்வத்தில் பூஜித்து வந்தால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் விலகிவிடுமாம்.
நீங்கள் வீட்டிலும் வில்வ மரம் வளர்க்கலாம். அப்படி வளர்த்து வருபவர்களுக்கு எம பயம் நெருங்காது என்பார்கள்..
இந்த வில்வ இலைகளால் மாலைகளை கோர்த்து சிவனுக்கு சாற்றலாம். இதனால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்துந்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..