“புரட்டாசி முதல் சனி..” விரதம் முழுமை அடைய இதை செய்ய மறக்காதீங்க..!!
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மிகவும் உகுந்த மாதமாக சொல்லபடுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் சனி பகவான் அவதரித்தார். அதனால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, நம்மை காக்கும் கடவுளான “திருமாலை” வணங்குவது வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது என ஆன்மீக ஐதீக வரலாற்றில் சொல்லியுள்ளனர்..
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சிறந்த மாதம். இந்த மாதம் முழுவதும் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்..
இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும். அன்னை மகாலட்சுமியின் அருளால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும்
புரட்டாசி சனி விரதம் : சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.. ஏழுமலையானை கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால்
சனிபகாவனின் பிடியில் இருந்து விலக முடியும்.., மேலும் சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு படையலிட்டு தீப ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..