கடவுளின் ஆசி கிடைக்க இதை செய்ய மறக்காதீங்க…!!
கடவுளின் அருள் கிடைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்., அப்படியாக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்களும் சரி., வீட்டில் பூஜை செய்து வழிபடுபவர்களும் சரி இதை முறையாக செய்தால் கடவுளின் ஆசி கிடைக்கும்
1. பொதுவாக ஒரு சில கோவில்களுக்கு நான்கு வாசல்கள் அல்லது இரண்டு வாசல்கள் இருக்கும்.., அப்படி எத்தனை வாசல்கள் இருந்தால் கோவிலின் பிரார்தன வாசல்கள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.. மற்ற வாசல்கள் வழியாக சென்றால் அவை நிவர்த்தியாகாது..
2. கோவிலுக்கு முன் நம்மிடம் யாசகம் (பிச்சை) கேட்கும் மனிதர்களுக்கு மனநிறைவோடு உதவி செய்ய வேண்டும்.. அப்படி உதவி செய்தால் அது பல மடங்கு புண்ணியத்தை கொடுக்கும்..
3. முக்கியமாக வீட்டில் தீபம் ஏற்றும் போது குலதெய்வத்தை நினைத்து அவர்களது திரு நாமத்தை சொல்ல வேண்டும். அப்படி செய்வதால் நமக்கு வரும் ஆபத்துகளில் இருந்து குலதெய்வங்கள் நம்மை காப்பாற்றுவார்கள்…
4. கோவில்களில் கொடுக்கும் தீர்த்தங்களை குடிப்பதால் நோய்கள் விலகும்., அதேபோல் வீட்டில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதன் மூலம் கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், மற்றும் தீய சக்திகளை விலக்கி விடும்.
5. முக்கியமாக வீட்டில் தீர்த்தத்தை தெளிப்பதன் மூலம் கெட்ட அதிர்வுகளை விலக்கி நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
6. பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் திருமணம் தாமதம் ஆகுவதை நாம் பார்த்து இருப்போம். அவரது சுப நிகழ்ச்சிகளுக்கு தடங்கல் சந்திக்கும் குடும்பங்கள் குலதெய்வத்திற்கு மாங்கல்யம் வாங்கி சாத்துவதாக பிரார்த்தனை வைத்துக் கொண்டால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். சுபகாரிய தடை விலகும். என்பது ஐதீக உண்மை….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..