மது அருந்துபவர் மற்றும் அதற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என்ற கருத்தை ஒன்றிய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் பகிர்ந்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பிற்கான நிகழ்ச்சியில் ஒன்றிய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் பங்கேற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், குடிப்பழக்கம் இருக்கும் நபர்களுக்கு பெண் தராதீர்த்தகள், எனது மகன் ஆகாஷ் கிஷோர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த பழக்கம் அவரிடம் அதிகமானதால் அவரை நாங்கள் மன்னாரு வாழ்வு மையத்தில் சர்த்தோம் ஆறு மாதங்கள் களைத்து அவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டார் என்று நினைத்து அவருக்கு நாங்கள் திருமணம் செய்து வைத்தோம். ஆனால், மீண்டும் அவர் அந்த பழக்கத்தை தொடங்கினார் அதனால் அவருக்கு உடல்நிலை மோசமானது அதையடுத்து அவர் உயிரிழந்தார். அவருக்கு 2 வயது மகன் இருக்கிறான். அவரது மனைவி விதவையாகியுள்ளார். நாங்கள் ங்கள் மகனை இழந்துவிட்டோம் என்று உருக்கமாக பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், குடிப்பழக்கம் இருக்கும் அதிகாரியை விட கூலி தொழிலாளிக்கு தங்களது மகள்களை திருமணம் செய்து வைப்பதே சிறந்தது என்றும் எம்.பி.யாக நானும், எம்.எல்.ஏ.வாக எனது மனைவி இருந்தும் கூட, எங்கள் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாதபோது, பொதுமக்கள் எப்படி அதைச் செய்ய முடியும் என்று பேசினார். மேலும் பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வுவகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.