கூந்தல் பராமரிப்பில் இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்..!
கூந்தல் பராமரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று ஆனால் நாம் செய்யும் சில தவறால், இன்னும் கூந்தல் உதிர்வு அதிகரிக்கிறது. அந்த தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.
தலை குளியல் : ஒரு சிலர் தினமும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். அது மிகவும் தவறு, தினமும் தலைக்கு குளித்தால் முடியின் வேர்கள் வலுவிழந்து விடும்.
நாளடைவில் முடி உதிரவும் ஆரம்பித்து விடும். குறைந்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளி விட்டாவது, தலைக்கு குளிக்க வேண்டும்.
கண்டிஷ்னர் : எந்த ஷாம்பூ பயன்படுத்து கிறோமோ அதற்குரிய கண்டிஷ்னரை தான் பயன்படுத்த வேண்டும். மற்ற ஷாம்பூ கண்டிஷ்னரை பயன் படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல் முடியில் வெடிப்பை ஏற்படுத்தும்.
தொப்பி : சில பெண்கள் ஸ்டைலிற்காக தொப்பி அணியும் பழக்கம் இருக்கும். எப்போதாவது தொப்பி அணிந்தால் அது தவறில்லை, ஆனால் எப்பொழுதும் தொப்பி அணிவது முடியை அதிகம் பாதிக்கும்.
காரணம் கூந்தலுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் கூந்தல் வேரை பாதிப்படைய செய்யும்.
ஈரமான கூந்தல் : இந்த தவறை தான் பல பெண்கள் செய்கின்றனர். முக்கியமாக வேலைக்கு செல்லும் பெண்கள், தலைக்கு குளித்து முடித்தவுடன் ஒரு துணியால் தலையை கட்ட வேண்டும்.
குறைந்தது அரை மணி நேரமாவது, தலையில் துண்டு கட்டி அந்த ஈரத்தை எடுக்க வேண்டும்.
தலைக்கு குளித்து முடித்து சில நிமிடத்திலேயே சிக்கு உடைத்து.., தலை சீவினால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.