யாரும் வெளிய போயிடாதீங்க..! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது. கரூர் மாவட்டம் பரமத்தியில் நேற்று 43.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.
இன்றுடன் வெப்ப அலை குறையும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், அரியலூர் மாவட்டத்துக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..