நாளையை எண்ணி இன்றைய உழைப்பை இழக்காதே..!! குட்டி ஸ்டோரி-9
ஒரு ஊருல.., ஒரு பொண்ணு இருக்கா அவகிட்ட ஒரு மாடு இருக்கு.
அந்த மாட்டுல இருந்து வர பால் வெச்சி அவளோட வாழ்க்கையே போயிட்டு இருக்கு. அவ மனசுல எப்போதுமே ஒரு சிந்தனை போயிட்டேயே இருக்குமாம்..
அது என்னனா…? எல்லாருகிட்டையும் பணம் இருக்கு, புது புது டிரஸ் போடுறாங்க நிறைய நகை போடுறாங்க நம்ம மட்டும் தான் ஏழையாவே இருக்கோம் ஆசைப்பட்டதை அனுபவிக்கவே முடியல அப்படினு யோசனையவே இருக்கா..
ஒரு நாள் வழக்கம் போல தலையில பால் பானையை வச்சிட்டு போய்ட்டு இருக்கா. அப்போ அவளுக்கு ஒரு யோசனை. இப்டியே இருந்த பணக்கார ஆக முடியாது.
நம்ம பணக்காரங்களா ஆகணும் அப்படினா பால்ல இருந்து வர காச கொஞ்சம் கொஞ்சமா சேத்துவச்சி முதல்ல ஒரு கோழி வாங்கலாம்..
அந்த கோழிக்கு நிறைய உணவுல போட்டு.., ஒரு ஆடு வாங்கலாம் அந்த ஆட்டுக்கு நிறைய உணவுல போட்டு அத வித்து ஒரு மாடு வாங்கலாம்.
அந்த மாட்டையும் நல்லா உணவுல போட்டு ஒரு பெரிய மாட்டு பண்ணையே வைக்கலாம் அதுக்கு அப்புறம் நம்ம பணக்காரங்களா ஆகலாம்
நம்ம நினச்சா மாதிரி புதுபுது டிரஸ்ல போடலாம் நகைல போடலாம் அப்படினு யோசிச்சிட்டேயே இருக்க தலையில இருக்குற பானையை மறந்துட்டா இப்டி யோசிச்சிட்டே போயிட்டு இருக்கும் போது அந்த பானை கிழவிழுந்து ஒடஞ்சிருது..
அந்த நாளுக்கான வியாபாரமும் போயிடுச்சி புது பானைக்கான செலவுவம் வந்துருச்சி .
இதுல இருந்து என்ன புரியுதுன்னா நாளைக்கு நடக்க போகுற வீசியத்தை நினைச்சி டைம் வேஸ்ட் பண்ணாம
இன்னிக்கு என்ன வேலையோ அத முயற்சி பண்ணுனோம் அப்படினா வாழ்க்கைல முன்னேறலாம்..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..