சரும பராமரிப்பில் இந்த தவறை செய்யாதீர்கள்..!! பெண்கள் கவனத்திற்கு.
சருமத்தை அழகாக வைக்க நாம் பலவும் செய்கிறோம், அதில் முக்கியமான ஒன்று வீட்டில் உள்ள சில உணவு பொருட்களை வைத்தே அதை செய்கிறோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அறியாமல்.
இதற்கு முன் இந்த தவறை நீங்கள் செய்து இருந்தால் இனி செய்ய வேண்டாம்.
எலும்பிச்சை பழம் : எலும்பிச்சை பழத்தில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால், சருமத்தின் கருமையை நீக்கும் என நினைத்து பலரும் அதை நேரடியாக முகத்தில் பூசு கின்றனர். அப்படி செய்தால் pH சமநிலையை சீர்குலைத்து விடும்.
இதனால் ஒவ்வாமை, தோல் வறட்சி போன்றவை ஏற்படும். எலும்பிச்சை பழத்தை நேரடியாக பயன் படுத்துவதை விட, தண்ணீரில் சில துளிகள் கலந்து முகத்தில் பூசலாம் அல்லது ஃபேஸ்பாக், போன்றவற்றில் கலந்து தடவலாம்.
உப்பு சர்க்கரை : முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் உப்பு அல்லது சர்க்கரையை நேரடியாக பயன் படுத்துவதால் வடுக்குகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இதை ஃபேஸ் ஸ்க்ரப்களில் கலந்து பயன் படுத்தலாம்.
சோடா உப்பு : சோடா உப்புக்கொண்டு ஃபேஸ்வாஷ் செய்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி, முகப்பரு பிரச்சனையை உருவாக்கும். பிக்மென்டேஷனுக்கு வழிவகுக்கிறது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.