உங்கள் துணையிடம் மறந்து கூட இதெல்லாம் பேசிடாதீங்க..!
கணவன் மனைவியோ, காதலன் காதலியோ இருவருக்கும் இடையில் அன்னோன்யமாகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இருவரும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் அப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே அந்த உறவு காலம் கடந்து நிலைத்து நிற்கும்.
அப்படி உங்கள் வாழ்க்கையும் இனிமையாக அமைய இந்த சில டயலாக்ஸை மறந்து கூட உங்கள் துணையிடம் சொல்லாதீங்க…
“நீ எப்பவுமே இப்படித்தான்” உங்கள் துணை உங்களுக்காக எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்து இருப்பார்கள், சில நேரங்களில் அவர்கள் செய்யும் சிறு தவறுக்காக “நீ எப்பவுமே இப்படித்தான்” என்று சொல்லக்கூடாது. இந்த வார்த்தை அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு கெட்ட எண்ணத்தை ஏற்ப்படுத்தும். இது அவர்களுக்கு உங்களுக்காக செய்யும் முயற்சியை கைவிட தோனும்.
“Don’t be so sensitive” இந்த வார்த்தையை உங்கள் துணையிடம் சொல்லும்போது அவர்களுடைய உணர்விற்கு நீங்கள் மதிப்பு கொடுக்காதது போல் உணர்வார்கள்.இது அவர்களை மனதளவில் மிகவும் காயப்பட வைக்கும். அவர்களுடைய உணர்விற்கும் மதிப்பளித்து இரண்டு பேரும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
“நீ என்னை உண்மையாக காதலித்தால் இப்படி செய்ய மாட்டாய்” இந்த வார்த்தையை பயன்படுத்தும்போது அது அவர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் காதலையே சந்தேகிப்பது போல் இருக்கிறது. இது அவர்களை மிக காயப்படுத்தும் எனவே இத்தகைய கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.
“என்னை விட்டுட்டு போகலாம்னு பார்க்குறியா?” இந்த வார்த்தையை சொல்லும்போது இது உங்களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை உணர்த்துகிறது. அடி மனதில் இப்படி பதிந்து இருக்கிறது. இது உங்களுடைய துணைக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும்.
“உன்னை விட என் முன்னால் காதலர் எவ்வளவோ பரவாயில்லை” இந்த வார்த்தையை உங்கள் துணையிடம் சொல்லவே கூடாது. இது உங்கள் Ex வுடன் அவர்களை ஒப்பிட்டு பேசுவது போல உணர வழிவகுக்கும். இது உங்களுக்கு அவர்களுடன் வாழ விருப்பம் இல்லை என உணர்வார்கள். இதையெல்லாம் தவிர்க்க கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் அன்பாக பேசி பழகுங்கள்.