இலவச பேருந்து வேண்டாம்.., ஆதங்கமாகும் பெண்கள்..! பேருந்து 21C..?
கடந்த சில வருடங்களாக கட்டணமில்லா இலவச பேருந்து செயல்பாட்டில் இருக்கிறது.., இது மக்களுக்கு பயன் அளிக்கும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாளின் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
இந்த இலவச பேருந்து முக்கியமாக நடுத்தர மக்களுக்கும்.., ஏழை மக்களுக்கும் பயன் அளிக்கும் விதமாக ஆரம்பத்தில் இருந்து தான் வந்தது. ஆனால் தற்போது இது.., அனைவரிடமும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
காரணம் பலரும்.., இலவசமாக பயணம் செய்பவர்கள் தானே என்று கமெண்ட் செய்வது.., பேருந்தை நிறுத்த சொன்னால் நிற்காமல் செல்வது, பயணச்சீட்டு கேட்டால் கூட தராமல் இருப்பது, சீட்டில் அமர்ந்தாள் கூட , இலவசமாக பயணம் செய்பவர்களே தானே, காசு கொடுப்பவர்களுக்கு இடம் கொடுங்கள் என்று சொல்லுவது.
அப்படி ஒரு சம்பவம் தான் இன்று 21C பேருந்தில் நடந்தது. பிராட்வேயில் இருந்து மயிலாப்பூர் செல்ல இந்த பேருந்து மட்டும் தான் இருக்கிறது.. எனவே இந்த வழியே செல்ல மக்கள் இந்த பேருந்தில் தான் ஏறி ஆக வேண்டும்.
பெண்கள் வரிசை இருக்கையில் இரண்டு ஆண்கள் வந்து பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்தார்கள், ஒரு வயதான பாட்டி கொஞ்சம் எந்திரித்து ஆண்கள் வரிசையில் சீட்டு காலியாக தானே இருக்கிறது. நீங்கள் அங்கு சென்று உட்காருங்கள்.
இங்கு நாங்கள் உட்கார்ந்து கொள்வோம் என்று தான் சொன்னார். இதில் என்ன தவறு உள்ளது. அதற்கு அந்த ஆண் நபர்.
ஏ கிழவி.., நீ சொல்லுறது கேட்குறதுக்கு நான் ஒன்னும் உன் புருஷன் இல்ல சரியா.., போறது ஓசி பஸ்ல.., இது நீ என்ன கேள்வி வேற கேட்குறியா.., என்று ஆரம்பித்து தகாத வார்த்தைகளில் பேச ஆரமித்தான்.
உடன் இருந்த மற்ற பெண்கள், வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் இப்படி பேசுவது ரொம்ப தப்பு.., நாங்க என் ஆண்கள் சீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை இப்படி பேசினால், உங்களுக்கு எப்படி இருக்கும். அப்படி தானே மற்றவர்களுக்கும். என்று கேட்க..,
பெண்களுக்கும் அந்த ஆணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.., இதை எல்லாம் நடத்துனர் பார்த்துக் கொண்டிருந்தும் எதுவும் சொல்லவில்லை.
அந்த ஆண் கேட்ட கேள்விக்கு.., அனைத்து பெண்களும் சொன்ன ஒரு பதில் இலவச பேருந்து இங்கு யாரும் கேட்கவில்லை, அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை, தயவு செய்து தமிழக அரசு.., எங்களுக்கு பழைய படி கட்டணமோடு செல்ல அனுமதிக்க வேண்டும்.
delux பேருந்து எல்லாம் பகுதிகளிலும் கிடையாது.., 32B பேருந்து எல்லாம் வெறும் White Board மட்டும் தான்.
என்று சொல்லி பல பெண்கள் இன்று வருத்தப்பட்டனர்.
மேலும் இதுபோன்ற பல உண்மை சம்பவங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..