”தூர்தர்ஷன்” சேனலுக்கு தடை..!! கண்டனம் தெரிவித்த சீதாராம் யெச்சூரி..!! தடைக்கு காரணம்..?
லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தூர்தர்ஷன் சேனலுக்காக பேட்டி அளிப்பது வழக்கம். அது தொடர்பான அறிவிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. 6 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது .
தற்போது அரசியல் கட்சி தலைவர்களின் பேட்டிகளில் சில வார்த்தைகளை மட்டுமே பேச தூர்தர்ஷன் நிர்வாகம் தடை விதித்திருந்தது.., அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. டெல்லி தூர்தர்ஷன் டிவி சேனல் ஸ்டுடியோவில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் வீடியோ உரை பதிவு செய்யப்பட்டது.
அப்போது திவால் என்ற வார்த்தையை சீதாராம் யெச்சூரி பேசியுள்ளார். அதற்கு தோல்வி என்று அர்த்தம் என்பதால் சீதாராம் யெச்சூரி மீது கண்டனம் எழுப்பப்பட்டது.
அதேபோல பார்வார்டு பிளாக் தலைவர் தேவராஜன், அகில இந்திய வானொலிக்கு கொடுத்த ஆடியோவில் இடம் பெற்றிருந்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ற வார்த்தையை நீக்கவும் நெருக்கடி தரப்பட்டிருந்தது. மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சிக்கும் இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள் என்ற வார்த்தையை தேவராஜன் பயன்படுத்தி இருந்தார்.
அதற்கும் தூர்தர்ஷன் தடை விதித்திருந்தது. இஸ்லாமியர் என குறிப்பிடாமல் குடியிரிமைக்கு தகுதியான சிறுபான்மையினர் என சொல்லுமாறு தூர்தர்ஷன் வலுயுறுத்தியது. ஆனால் தேவராஜன் அதனை ஏற்க மறுத்திருந்தார். அவரது உரை ஒலிபரப்பான போது இஸ்லாமியர்கள் – முஸ்லிம்கள் என்ற வார்த்தையும் நீக்கப்பட்டது.
இதனால் தூர்தர்ஷன் சேனலுக்கு சீதாராம் யெச்சூரி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது.., ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.
திவால் என்ற வார்த்தையை நீக்கி தோல்வி என உச்சரிக்க சொல்லும் தூர்தர்ஷன். சர்வாதிகார ஆட்சி, கொடூர சட்டங்கள் என குறிப்பிடக் கூடாது. இது சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்துகிறது, என காட்டமாக தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..