தோஷங்களும் பரிகாரங்களும்..!! தோஷங்கள் நீங்க இதை செய்ய மறக்காதீங்க..!!
செய்வினை கோளாறுகள் நீங்க எந்த மாதிரியான பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இது போல் பித்ருக்களுக்கு முறையானதை செய்யாமல் இருந்தால் அவர்கள் வாழ்வில் வளம் என்பதே கிடைக்காது. இதற்கும் நாம் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். பித்ரு தோஷங்கள் இருந்தால் ஒருவரது வீட்டில் திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, வேலையின்மை, பண கஷ்டம் உள்ளிட்டவை இருந்தால் அதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
அதாவது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ப்பணத்தை நாமோ அல்லது நமது மூதாதையர்களோ செய்யாமல் இருந்தால் அது தோஷமாக பிரதிபலிக்கும். இந்த பித்ரு தோஷத்தை போல் பல்வேறு தோஷங்களை போக்க என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது..
ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது.
அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்க்கு எச்சில் அசுத்த இடங்கள் படாத, அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், எள்ளு ஆகியவற்றை கலந்து கொடுத்து வந்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சூரிய தோஷம் நீங்கும்.
சுமங்கலி பெண்களுக்கு துணி வகைகள், தேங்காய், பூ, பழம், தாலிக் கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெற்றால் களத்திர தோஷம் நீங்கும்.
கால சர்ப்ப தோஷங்கள் நீங்க வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி அன்று அஷ்ட நாகங்களை வழிபட்டு அஷ்ட நாகங்களுக்கும் தீபமேற்றி, குங்கும அர்ச்சனை செய்தால் கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பௌர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால், ஒருவர் செய்த செய்வினை உங்களைப் பாதிக்காமல் நல்ல பலனை அடையலாம்.
சீர்காழி அருகிலிலுள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தர்ப்பணம் திதி செய்ய பூர்வ ஜென்ம கர்ம தோஷம் நீங்கும்.
உயர் திரு உலகாளும் காகம் வாகனம் ஈஸ்வர் தோஷம் நீங்க :
கடுமையான பாதிப்புள்ளோர் இரும்பு விக்கிரகம், நீலக்கம்பளி, கருப்புப்பட்டு, கருப்பு பசு, சாலிக்கிராமம், எள்ளுடன் கூடிய பாத்திரம், அரசு வேம்பு உற்பத்தி செய்து திருமணம் செய்வித்தல், கருங்குவளைப் பூ, நீலம் இவைகளை தானம் செய்யலாம்.ஜென்ம நட்சத்திரத்தில் மற்றும் சனிக்கிழமையில் தானம் செய்ய வேண்டும். கடுமையான முன் பாவ வினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
சிவன் கோவிலில் குளிகை நேரத்தில் விநாயகரை வணங்கிவிட்டு, சிவன் கோவிலை 18 முறை வலம் வந்து, பிறகு சிவனை தரிசனம் செய்து உங்களின் பேரில் அர்ச்சனை செய்துக்கொள்ளுங்கள்.
பிறகு அம்பாளை தரிசனம் செய்து, நவக்கிரகத்திற்க்கு சென்று சனி ஈஸ்வரர் பகவானுக்கு தீபம் ஏற்றிவிட்டு நேராக உங்களின் வீட்டிற்க்கு சென்றால் மாந்தியால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்..
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..