அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை, தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது
உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் அமர்விடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்குரைஞர் அரிமா சுந்தரம் முறையீடு செய்தார். இம்முறையீட்டு கோரிக்கையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது கோரிக்கையை தெரிவித்துவிட்டீர்களா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்க்கு, தகவல்களை பகிர்ந்து கொண்டடோம் என பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது.
இதையடுத்து, வரும் 30 ஆம் தேதி அன்று முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.