இரட்டையர் பூப்பந்து விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இரட்டையர்கள்..!!
சர்வதேச அளவில் நடைபெற்ற இரட்டையர் பூப்பந்து விளையாட்டில் இரண்டு நண்பர்கள் தங்கப்பதக்கம் வென்று ஊர் திரும்பிய இரட்டையர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சால்வை அநிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர பகுதியில் வசித்து வரும் இனாமுல் ஹஃக் மற்றும் முகமத் சோபன் ஆகிய இரண்டு நபர்களும் சிறு வயது முதலே ஒன்றாக படித்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர்இவர்கள் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இனாமுல் ஹாஃக் தந்தை பஷீர் அகமத் தனியார் காலனி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.
முகமத் சோபன் இவருடைய தந்தை முபாரக் அலி ஹோட்டல் நடத்தி வருகிறார். இருவரும் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் இரட்டையர் பூப்பந்து விளையாட்டில் பல பதக்கங்கள் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வென்றுள்ளனர்.
இந்நிலையில் 14,15,16 ஆகிய தேதிகளில் நேபாளத்தில் நடைபெற்ற பூப்பந்து விளையாட்டில் இந்தியா, பாகிஸ்தான் நேபால் உள்ளிட்ட 10 நாடுகள் கலந்து கொண்டு விளையாடிய சர்வதேச அளவில் விளையாடுவதற்காக யூத் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் அசோசியேஷன் மூலம் நேபால் சென்றுஇரட்டையர் பூப்பந்து விளையாட்டில் இரண்டு நண்பர்களும் தங்கப்பதக்கம் வென்றனர்.
சர்வதேச அளவில் இரட்டையர் பூப்பந்து விளையாட்டில் தங்கம் பதக்கம் வென்று ஊர் திரும்பிய இரண்டு நண்பர்களை ஊர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உறவினர்கள் நண்பர்கள் என உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் தங்கப்பதக்கம் வென்ற இரட்டையர் பூப்பந்து விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க தமிழக முதல்வர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்