வங்கிக்கடன் தவணைகளை ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

கெரோனா பாதிப்பு காரணமாக அனைத்து வங்கிக்கடன் தவணைகளையும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து வங்கிக்கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த காலங்களுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுத்துறை வங்கி அதிகாரிகளை அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் வங்கி அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், இதேபோல், தமிழக முதலமைச்சரும் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

What do you think?

அமராவதி குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது – வைகோ வலியுறுத்தல்

22-ஆம் தேதி மக்கள் ஊரடங்கு! – பிரதமர் மோடி