போதை பொருள் ஒழிப்பு தினம்… கோவை கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புனர்வு போராட்டம்…!
தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதாரணமாக புகையிலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என கோவை பந்தயசாலை பகுதியில் எஸ். என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக இயக்குநர் சுந்தர் பேட்டி அளித்துள்ளார்.
பேட்டியில் கூறியதாவது:
ஒவ்வொரு வருடமும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்க பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து புகையிலை குறித்த விழிப்புணர்வை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தியும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை பந்தயசாலை பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புகையிலை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் சைக்கிளத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை பந்தயசாலை காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுனன், மற்றும் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக இயக்குநர் சுந்தர் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடனத்துடன் உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயனம் மேற்கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
சைக்கிளிங் மற்றும் நடைப்பயணத்தின்போது புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானிகார்த்திக்