போதை பொருள் இல்லா தமிழ்நாடு.. விழிப்புணர்வு பேரணி.. துவக்கி வைத்த அமைச்சர்..
போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கம் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மருத்துவக்கல்லூரியில் உள்ள அனிதா அரங்கில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருத்தை முன்னிறுத்தி கல்லூரி மற்றும் பள்ளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து அனிதா அரங்கம் முன்பு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றனர்.
பேரணி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு , முக்கிய வீதிகளின் வழியே சென்று இரண்டு கிலோ மீட்டர் முடிவில் பேருந்துநிலையத்தில் உள்ள அண்ணா சிலையில் நிறைவடைந்தது.
விழிப்புணர்வு பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்
இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். 5 வயது குழந்தைகள் முதல் 80 வயது மூதாட்டி வரை, அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இப்படியான சமூகத்தில், தற்போது பெண் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ஒரு நபர், 56-க்கும் மேற்பட்ட நாய்களை, சாகும்வரை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் ஆடம் பிரிட்டன். 52 வயதாகும் இவர், பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில், விலங்கியல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.
விலங்குகள் மீது செக்ஸ் ஆர்வம் கொண்ட இவர், இதுவரை 56-க்கும் மேற்பட்ட நாய்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுமட்டுமின்றி, நாய்கள் மீது ஈர்ப்பு கொண்ட வேறு சில நபர்களையும், தன்னுடன் இவர் இணைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நாயின் உரிமையாளர் அளித்த புகார் ஒன்றில், காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றத்தில் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆடம் பிரிட்டனின் நடத்தை மிகவும் கோரமானது.
அவருடைய குற்றங்கள் எந்த ஒரு சாதாரண மனித சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை” எனக் குறிப்பிட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறார்.
-பவானி கார்த்திக்