மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்..!!
அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி ஒரு வீட்டில் இருந்து 54 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் போதைபொருள் புழக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில்., அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் போதைபொருள் கடத்தல் மற்றும் தடுத்தல் சிறப்பு பிரிவு காவலர்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து போதைபொருட்களை பறிமுதல் செய்து ஒழித்து வருகின்றனர்..
மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா மற்றும் கூல் லிப் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.. அதன்படி ஐஜி தனிப்படை போலீசாரும் திடீர் சோதனை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அந்த கடையில் விசாரணை நடத்தியதன் தொடர்ச்சியாக வெங்கடேசபுரத்தில் உள்ள கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 8 மூட்டைகளில் 54 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் பறிமுதல் செய்தார்.
அதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாபு (வயது 38) என்பவரை கைது செய்து., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..