ஊக்கமருந்து சர்ச்சையால் சிமோனாவுக்கு நேர்ந்த விபரீதம்..!
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய நம்பர் ஒன் முன்னால் வீராங்கனை “சிமோனா ஹாலெப்” (31 வயது, ருமேனியா), சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்க 4ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2017, 2018ல் முதலிடம் பிடித்த ஹாலெப் 2018 பிரெஞ்ச் ஓபன், 2019 விம்பிள்டன் போட்டிகளில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
அதில் ஏற்பட்ட காயங்களால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது, சுவாச கோளாறு பிரச்னையின் காரணமாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
2022 யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் தோற்றதால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அந்த ஆட்டத்தில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சில குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால் அவரை பரிசோதனை செய்ய டென்னிஸ் குழு திட்டமிட்டது.., எனவே அந்த பரிசோதனையில் “ரோக்சாடுஸ்டாட்” என்ற மருந்து அவரின் ரத்தம் மற்றும் சிறுநீரில் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அது ரத்த சோகை நோய் உள்ளவர்கள் பயன்படுத்தும் மருந்துகளில் பயன் படுத்தப்படுகிறது. இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது சர்வதேச டென்னிஸ் முகமை, “சிமோனா” ஊக்கமருந்து பயன்படுத்தி விளையாடியது உறுதி செய்யப்பட்டது எனவே அவருக்கு 4 ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை எதிர்த்து சிமோனா தரப்பில் மேல் முறையீடு செய்ய வழக்கு தொடர இருப்பதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.