சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது.
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5,630 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 45,040 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6,090 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 48,720 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 70 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.