தொடர் விடுமுறை காரணமாக உதகையில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்.. தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. போக்குவரத்து கட்டுபாட்டால் 4 மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு..
மலைகளின் அரசியல் என்று அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. சீசன் காரணமாகவும், தொடர் விடுமுறை காரணமாகவும் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று கேரளா மற்றும் கர்நாடகாவை சார்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்து வந்தனர்.
இதனால் உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, பேரணி இல்லம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இதமான காலநிலையை அனுபவித்து செல்கின்றனர்.
இதனால் உதகையில் சீசன் கலைக்கட்டி உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூடலூர் வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் ஹில் பங்க் – பஸ் ஸ்டேண்ட் சாலையிலும் குன்னூரில் இருந்து வரும் வாகனங்களை ஆட்சியர் அலுவலக சாலையிலும் காவல்துறையினர் திருப்பி விட்டதால் 5 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் 4மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை காணபடுகிறது.