“அண்ணன் ரெடி போஸ்டர் அடி” சின்னத்தை அறிவித்த துரைவைகோ..!!
ஒரு ஆண்டுக்கு 2.70 லட்சம் கோடி ரூபாயை அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக ஒதுக்கி தர வேண்டும்.. தமிழக அரசும் தொடர்ந்து பல நலத்திட்டங்களை கொண்டு வருகிறது.., காவிரி நீர் பங்கீட்டை பெறுவதற்காக சட்டரீதியான செயல்களை செய்து வருகிறது..
இன்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக துரைவைகோ வருகை கொடுத்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்..,
காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை கொடுக்காததால் தமிழகத்தில் 3லட்சம் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளன அதற்கான இழப்பீடு தொகையை தமிழக அரசு கொடுக்க வேண்டும்..
மேலும் தமிழகத்தில் 100 வேலை திட்டம் பின்னடைந்துள்ளது.., இந்த 100 நாள் வேலை திட்டத்தில் 16கோடி பெண்கள் வேலை செய்து அதில் வரும் பணத்தை வைத்து தங்களில் வாழ்வாதரங்களை பார்த்து வருகின்றனர்..
கடந்த ஆண்டு வரை மட்டும் 72 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இதற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.., 21% விழுக்காடிற்கு குறைவாக 6௦ ஆயிரம் கோடி ரூபாயை மட்டும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்துவருகிறது..
ஆனால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீரை தர மறுக்கிறது.., உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் மற்றும் விவாசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து சரியான தீர்ப்பை வழங்க வேண்டும்..
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் சில பேச்சுவார்த்தைகளை கருத்தில் கொண்டு “பம்பரம்” சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்..
வருகிற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி செய்ய கூடாது என்ற நோக்கில் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள இருப்பதாக துரைவைகோ செய்தியாளர்கள் முன் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..