ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கடலூரில் துரை வைகோ தெரிவி்த்துள்ளார்.
கடலூர் மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் முதுநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ, கலந்து கொண்டு பேசினர்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ,
ஒரே நாடு ஒரே தேர்தல் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது அது ஜனநாயகத்திற்கு எதிரானது. கடந்த 4 ஆண்டுகளாக கேஸ் விலை குறைக்காதது ஏன்? தேர்தலுக்கு முன் கேஸ் விலை குறைக்கப்படுவது மக்களை ஏமாற்றும் செயல்,காய்கறி,துணி உள்ளிட்ட அனைத்து விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு தான் காரணம் என தெரிவித்தார். மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்குவது பெருமைப்படக்கூடிய ஒன்று தான் எனக்குறிப்பிட்ட அவர்,
அடித்தட்டு மக்களும், விவசாயிகளும் நலன்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதும் அவர்கள் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது மத்திய அரசின் கடமை தான் என்றார்.மேலும் இந்திய அரசியல் முதல்முறையாக ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது இந்த தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும் என துரை.வைகோ தெரிவித்தார்.