7 மாத சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் துரைதயாநிதி…!! நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு,க,அழகிரி மகன் துரைதயாநிதி 7 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்…
திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும்., கலைஞரின் மகனுமான மு.க அழகிரியின் மகன் “துரை தயாநிதி” பிரபல தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். துரை தயாநிதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு “ருத்ர தேவ்” மற்றும் “வேதாந்த்” என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீட்டின் மாடி படியில் இருந்து கால் தவறி கீழே விழுந்த போது தலையில் காயம் ஏற்பட்டது., பரிதவித்த உறவினர்கள் அவரை மீட்டு சென்னை அப்பல்லோ அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதனையடுத்து அங்கேயே 4 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த தயாநிதி மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 14ம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து 3 மாதங்களாக பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை மற்றும் வேலூர் என தொடர்ந்து 7 மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்த துரைதயாநிதி இன்று உடல் நலன் பெற்று மருத்துவமனையில் இருந்து நலமுடன் திரும்பினார்.. இனி அவரது உடலுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
இந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு இடையில் துரைதயாநிதி அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை மிரட்டல் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது..