‘பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி’ பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்!

பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால் திமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து துரை முருகன் விலகுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. வரும் மார்ச் 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடும் எனவும் அதில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” கடந்த 15-ம் தேதி அறிக்கையின் வாயிலாக, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், வரும் 29-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 16-ம் தேதி வெளியிட்ட கடிதத்தின் வாயிலாக, திமுக பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட விழைவதாகவும், எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.

எனவே, வரும் 29-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

What do you think?

’80 வயதுக்கு மேல் உள்ளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சாகட்டும்’ அரசு அதிரடி முடிவு?

கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் தமிழரின் உணவு!