“நசியம் சிகிச்சை முறை” என்றால் என்ன..? பார்ப்போமா..?
ஆயுர்வேதத்தில் “மூக்கே மூளைக்கான நுழைவாயில்” என சொல்கிறார்கள். மூலிகை சாறு, மூலிகை எண்ணெய் ஆகியவற்றை மூக்கினுள் செலுத்தி நோய்களை தீர்க்கும் வைத்தியம் “நசியம் சிகிச்சை” முறையாகும். இதை பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
பஞ்சகர்மா சிகிச்சை முறையில் நசியமும் ஒன்று. இது தலைப்பகுதியில் இருக்கும் மூக்கு, காது, கண், தொண்டை ஆகிய பிரச்சனைகளை சரிசெய்கிறது.
நசியம் செய்வதால் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்கலாம். குறிப்பாக தலை, சைனஸ், காது பிரச்சனை, கழுத்து, தலைவலி, நரம்பு பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. மூக்கின் வழியாக மூலிகை பவுடர், நெய், எண்ணெய் ஆகியவற்றை செலுத்துவதன் மூலம் மூக்கு அடைப்பு பிரச்சனையை குணமாக்கலாம்.
இதை செய்வதால் மனத்தெளிவு கிடைத்து ஸ்ட்ரெஸ், நினைவாற்றல், தூக்கமின்மை சரியாகிறது. மேலும் முடி பிரச்சனை, நரை முடி ஆகியவற்றையும் சீராக்குகிறது. காது, மூக்கு, கண் ஆகிய உறுப்புகளை மேம்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இந்த சிகிச்சையை செய்யும்போது உடலில் இருக்கும் கழிவுகள் நீங்கி, முகப்பொலிவு உண்டாகும். சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
இந்த சிகிச்சை முறையை 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் 7 வயதிற்கு உள்ளவர்கள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம். இதனை கர்பிணி பெண்கள், மாதவிடாய் உடையவர்கள், மூக்கில் சிகிச்சை செய்தவர்கள் தவிப்பது நல்லது.