சிக்கன்,மட்டன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வருமா?

கோழிக் கறி, ஆட்டுக் கறி மற்றும் கடல் உணவுகளை உண்பதால் கொரோனா வைரஸ் பரவும் என்று கூறுவதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 3,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறபடுகிறது.

இந்நிலையில் மாமிச உணவுகளான ‘சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்திய உணவு தரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பானது சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகளை உண்பதால் கொரோனா வைரஸ் பரவும் என்று கூறுவதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லையென்று தெரிவித்துள்ளது.

இது குறித்து, பேசிய இந்த அமைப்பின் தலைவர், ஜி.எஸ்.ஜி. ஐய்யங்கார் கூறுகையில்,”கொரோனா ஒரு வைரஸ். அது எவ்வாறு பரவுகிறது என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், வெப்ப மண்டலமான நம் நாட்டில், இந்த வைரஸ் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. மேலும் சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகளான மீன், இறால் போன்றவற்றை உண்பதால் ‘கொரோனா வைரஸ்’ பரவுவதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான கருத்து.

இந்த வைரஸ் பாதித்த நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை. இதற்கென நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழுவானது, உணவுப் பொருட்களால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது. இருப்பினும் மாமிசத்தை பச்சையாகவோ அல்லது அரைவேக்காட்டிலோ சாப்பிடுவதை தவிர்க்கலாம்”என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

‘PhonePe சேவை முடக்கம்’ பின்னணி என்ன?

‘பாஜக உள்ளிட்ட இந்த 4 முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை’ ரஜினி அதிரடி முடிவு?