இரவில் இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க..!!
இரவில் துல்லியமாக பார்க்க என்ன என்ன பழங்கள் காய்கறியை சாப்பிடுலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
சர்க்கரை வள்ளி கிழங்கு :
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ யின் மூலாதாரமாக உள்ளதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேகவைத்தோ பொறியலாகவும் சாப்பிடலாம் .
கேரட் :
வைட்டமின் ஏ சத்துக்கு பிரபலமானதாகும். இது பச்சையாகவோ, வருத்தோ அல்லது சூப்புகள் மற்றும் பொறியல்களில் சேர்த்தோ சத்தான ஊட்டச்சத்தை பெறலாம்.
கீரைகள் :
இரும்பு சத்து மட்டுமின்றி வைட்டமின் ஏ சத்தும் கீரைகளில் நிரம்பியுள்ளது. ஒரு கப் சமைத்த கீரை தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் ஏ அளவை முழுமையாக பூர்த்தி செய்யும் .
பப்பாளி :
சுவையுடன் பல ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியது. குறிப்பாக வைட்டமின் ஏ தாராளமாக இருக்கிறது. இதை ஸ்மூத்தியாகவோ அல்லது சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம் .
ஆப்ரிகாட் :
இனிப்பு, கசப்பு, கலந்த பழம் இது. மேலும் கணிசமான அளவு வைட்டமின் ஏ இதிலுள்ளது . உலர்ந்த ஆப்பிரிகாட் பழங்களை டயட்டில் சேர்த்துக் கொண்டால் போதிய சத்தை பெறலாம்.
மாம்பழம் :
கோடையில் சீசனை கொண்ட சுவை மிகுந்த மாங்கனியில் விட்டமின் ஏ நிறைந்து இருக்கிறது. எனவே சீசன் நேரத்தில் தினம் ஒரு பழம் சாப்பிட்டு சுவையோடு சத்தையும் பெறுங்கள்.
பூசணி :
சூப்பாகவோ அல்லது வேக வைத்தோ இதை உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் தினசரி வைட்டமின் ஏ தேவைகளுக்கு கணிசமாக பங்களிக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..