வாழைப்பழ வகைகளும் அதன் பயன்களும்..!
பூவம் பழம்:
பூவம் பழம் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தசைகளின் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கிறது.
பேயன் வாழைப்பழம்:
உடலில் இருக்கும் அதிகபடியான உடல் சூட்டையும் பேயன் பழம் தணிக்கும். பேயன் பழம் குடலில் உண்டாகும் புண்ணை குணமாக்குகிறது.
ரஸ்தாளி பழம்:
அடிக்கடி ரஸ்தாளி பழத்தை சாப்பிடுவதால் இதயம் சம்மந்தபட்ட நோய்களின் அபாயம் குறைகிறது. வயிற்று போக்கையும் இது சரிசெய்கிறது.
மொந்தம் வாழைப்பழம்:
மொந்தம் வாழைப்பழமானது உடலில் இருக்கும் வறட்சியை போக்குகிறது. ரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் மொந்தம் பழம் பயன்படுகிறது.
செவ்வாழைப்பழம்:
செவ்வாழைப்பழம் சாப்பிடும்போது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலில் இருக்கும் எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது.
கற்பூரவள்ளி வாழைப்பழம்:
கற்பூரவள்ளி பழம் உடலில் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்பூரவள்ளி தலைவலியை குணமாக்குகிறது.
நேந்திர வாழைப்பழம்:
நேந்திரம் வாழைப்பழமானது உடல் எடையை அதிகரிக்கிறது. ஆகவே எடையை குறைக்க நினைப்பவர்கள் நேந்திரம் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். குடலில் இருக்கும் புழுக்களை அழிக்க நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
பச்சை நாடா வாழைப்பழம்:
பச்சை நாடா வாழைப்பழமானது உடலில் ரத்த உற்பத்தியை கூட்டுகிறது. கடுமையான மலச்சிக்கலும் பச்சை நாடா வாழைப்பழம் சாப்பிடுவதால் நீங்குகிறது.
மலை வாழைப்பழம்:
மலை வாழைப்பழத்தின் விலை சற்று அதிகமாக இருக்கும். மலைவாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு அழகு சேர்க்கும். இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டு வர ரத்த உற்பத்தி அதிகரிக்கும். இது ஜீரண கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.