மூலநோயால் அவதியா? இதோ தீர்வு..!
மூலம் கட்டுப்பட வாரம் இருமுறை வீதம் கருணைக்கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
முளைக்கீரை சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நன்மை அளிக்கும்.
தேனில் பப்பாளி மற்றும் மாம்பழம் இரண்டையும் ஊறவைத்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
மூலம் தீர இரவில் மாம்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
பப்பாளியை அன்றாடம் சாப்பிட மூலநோய் தீர்ந்து எதிர்ப்பு சக்தி கூடும்.
அருகம்புல் வேரை அரைத்து பசும் பாலில் கலந்து சாப்பிட இரத்த மூலம் குணமாகும்.
வாழைப்பூ சாறுடன் கடுக்காய் பொடி சேர்த்து சாப்பிட மூலம் சரியாகும்.
மாதுளம்பழ தோலை நீரில் ஊறவைத்து அந்த நீரில் மலம் கழித்த பிறகு கழுவி வர புண் மற்றும் மூலம் குணமாகும்.
வெங்காயத்தை வதக்கி எடுத்துகொண்டு அதனை ஆசனவாயில் கட்ட வெளிமூலம் தீரும்.
முடக்கத்தான் இலையை நசுக்கி சாறு எடுத்து அதில் ரசம் வைத்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.