வறண்ட சருமத்திற்கு எளிமையான தீர்வு..!
உடல் எடையை குறைத்த பிறகு உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதினால் முகம், கை, கால், கழுத்தில் ஏற்ப்படும் சுருக்கங்களை மறைய வைக்க வாரம் ஒரு முறை டைட்டனிங் ஃபேஸியல் செய்ய வேண்டும்.
நம் வீட்டிலே டைட்டனிங் மாஸ்க்கை தயாரிக்க முடியும். முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுக்க வேண்டும். பின் அதில் சிறிது முல்தானிமட்டி, தேன் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து நன்றாக தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் பொலிவாகும்.
முகத்தில் டைட்டனிங் மாஸ்குகளும், ரைட்டனின் ஃபேஷியல்களும் உபயோகிப்பது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பயன்படுகிறது. சருமத்தை பாதுகாக்க கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, தாதுக்கள்,வைட்டமின்கள் போன்ற உணவுகள் தேவைப்படுகிறது.