ADVERTISEMENT
ஞாபக சக்தியை அதிகப்படுத்தக் கூடிய வல்லாரை கீரை சட்னி…
நம் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசைக்கு கார சட்னி , தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என செய்து சாப்பிட்டு நமக்கும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்துப்போய் இருக்கும்.
அந்த சலிப்பை போக்க இப்போது அருமையான மற்றும் ஆரோக்கியமான சட்னி ஒன்று எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
வல்லாரை கீரை சட்னி சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள் :
-
வல்லாரைக் கீரை – 1 கட்டு
-
பெரிய வெங்காயம் – 1
-
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
-
புளி – சிறிதளவு
-
வரமிளகாய் – 3
-
பூண்டு – 5 பல்
-
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
-
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
-
பெங்காயத் தூள் – 1 பின்ச்
-
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை :
-
எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
-
கடுகு – 1/2 டீஸ்பூன்
-
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து மூன்று முறை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் போட்டு வறுக்கவும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அலசி வைத்துள்ள வல்லாரை கீரையை போட்டு வதக்க வேண்டும்.
கீரை நன்கு வதங்கியதும் அதில் சிறுது தேங்காய் துருவல், புளி கொஞ்சம் போட்டு வதக்கவும்.
வதக்கிய கலவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தது வாணல் ஒன்று அடுப்பில் வைத்து எண்ணெய் தேவையான அளவு ஊற்றி சூடுப்படுத்தி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.