தீபக் ராஜா கொலை எதிரொலி..! பரபரப்பான நெல்லை..! ரவுடிகளின் வீட்டில்..?
நெல்லை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா கடந்த 20ம் தேதி தனது காதலி மற்றும் காதலியின் தோழியோடு கேடிசி நகர் ஹோட்டலில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் தீவிர ஆதரவாளரான தீபக் ராஜா மீது முன்னரே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில், சாதி வன்கொடுமையால் தீபக் ராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் நெல்லை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் முடிவில் தீபக் ராஜா பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.., இந்த கொலை வழக்கில் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் இதில் ஈடுபத்துப்பட்டிருப்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும் பழைய ரவுடிகளின் பட்டியலை காவல்துறையினர் தூசி தட்டி பார்த்த போது. செல்வின் நாடாரில் தொடங்கி ராக்கெட் ராஜா, வெங்கடேஷ் பண்ணையார், சுபாஷ் பண்ணையார் உட்பட பலருக்கும் காவல்துறையினர் தனிப்பட்ட முறையில் 24 மணி நேரம் பாதுகாக்கப்பு வழங்கபட்டுள்ளது.
ரவுடிக்கு 24 மணி நேர பாதுகாப்பு :
குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் ரவடியாக சுற்றி திரிந்து தற்போது ரவுடி என்ற அந்த அடையாளத்தை மறந்து வாழும் பலருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இடையார் தவனையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு 24 மணி நேர ஸ்பெஷல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் நெல்லை, தூத்துக்குடி உட்பட்ட மாவட்டங்களிலும் பழைய ரவுடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போர்க்களம் போல ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர்.
இக்கொலை சம்பவத்தில் தற்போது 4 பேர் கைதாகியுள்ள நிலையில், பத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தற்போது பிடிபட்ட நாலு பேரும் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை எஎன்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நிஜ குற்றவாளிகளை கைது செய்யும் வரை தீபக் ராஜா உடலை வாங்க மாட்டோம் என தீபக் ராஜா உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இன்னும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, நெல்லை மாவட்டம் முழுவதும் எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஸ்பெஷல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக ரவுடிகள் வீடு உள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி கூறியதாவது தீபக் ராஜா உடலை உறவினர்கள் பெரும் வரை பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், அவரது உடலை கொண்டு செல்லும் போது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..