பிட்காயின் மோசடி! – காவல்துறை எச்சரிக்கை

பிட்காயின் வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் கிரிக்படோ கரன்சி பரிவர்த்தனை இந்திய ரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் ரிப்பிள் லைட் காயின், எத்திரியம் போன்ற மெய்நிகர் பணத்தை விற்பது, வாங்குவது தொடர்பான பரிவர்த்தனைகள் இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்திய ரிசர்வ் வங்கி கிரிப்டோ கரன்சியை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பிட்காயின் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு, பிட்காயினை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

What do you think?

ஜம்முவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து