மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவனை தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொல்.திருமாவளவன் எம்.பி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை நேற்று முதல்வர் மு,க ஸ்டாலின் விசாரித்த நிலையில், இன்று காலை கைப்பேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்துள்ளார்.
மேலும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் விசிக அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக தகவல் பரவிய நிலையில், தற்போது எடப்பாடி திருமாவளவனிடம் பேசியிருப்பது கேள்வியை எழுப்பியுள்ளதே என்றே கூறலாம்.